பழநி: பழநியில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பழநியின் முக்கிய பகுதிகளான மயில் ரவுண்டான, குளத்து ரோடு ரவுண்டான பகுதிகள் கடந்த மார்ச் 25, ல் மாற்றி அமைக்கப்பட்டன. அவை நேற்று திறக்கப்பட்டன. இதில் மயில் ரவுண்டானவில் வேறு மயில் வைக்கப்பட்டது. குளத்து ரோடு ரவுண்டானாவில் வேல் வைக்கப்பட்டது. இப்பகுதி பஸ் ஸ்டேண்ட் அருகே காந்தி மார்கெட் ரோடு, புதுதாரபுரம் ரோடு, திண்டுக்கல் ரோடு, குளத்து ரோடு சந்திக்கும் பகுதியாகும். இந்த வேல் அமைப்பு பழநியின் புதிய அடையாளமாக உள்ளது. சமூக வலைதளங்களில் "வேல் ரவுண்டானா" என வேல் அமைப்பை பதிவிட்டு வருகின்றனர்