தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே செட்டியார்பட்டி வரத விநாயகர் ஐயப்பன் யாத்திரை குழு சார்பில் குரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 14 வது நாளாக இலவச உணவு வழங்கப்பட்டது. சேத்தூர், செட்டியார்பட்டி, அரசரடி உள்ளிட்ட இடங்களில் தினமும் 150 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யாத்திரை குழு நிர்வாகிகள் மணிகண்டன், பழனிகுமார், பூமிநாதன், பாண்டி கணேசன் தலைமையில் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.