‘நாம் வைத்தது தான் சட்டம், நாம் சொல்வது மட்டும்தான் நடக்க வேண்டும், நான் நினைத்ததை அடைய என்ன வேண்டும் என்றாலும் செய்வேன்’ என ஆணவத்துடன் திரிபவர்கள் பூமியில் இருக்கிறார்கள். இவர்களது தைரியம் நம்மைத் தட்டிக் கேட்க யார் இருக்கிறார்கள் என்பதுதான். ‘‘உலகம் வெளி அழகைக் காட்டி ஒடிக்கொண்டிருக்கிறது. மறுமை நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டுக்கும் வெவ்வேறு மனிதர்கள் உள்ளனர். நீங்கள் மறுமையின் மனிதர்களாக மாறிவிடுங்கள். உலக மனிதர்களாக ஆகிவிடாதீர்கள். இங்கே செயல் மட்டுமே! கேள்வி இல்லை. அங்கே கேள்வி மட்டுமே! செயல் இல்லை’’ என்கிறார் நாயகம். ஆம்.... இங்கே நாம் என்ன வேண்டுமானாலும் பாவச்செயல்களை செய்து பலனடைந்து கொண்டிருக்கலாம். இங்கே கேள்வி கேட்க ஆளில்லை என்ற தைரியம் இருக்கலாம். கேட்டாலும் அவர்களை ஒடுக்கி விடலாம். ஆனால், அங்கே யாரையும் அடக்க முடியாது. இங்கே செய்யும் செயல்களுக்கு அங்கே பதில் அளிக்க வேண்டியிருக்கும். பின், நரக நெருப்பில் வீழ்வதை தவிர வேறு வழியே கிடையாது. எனவே ஆபத்தை தரும் ஆணவம் வேண்டாமே.