பதிவு செய்த நாள்
14
ஜூன்
2021
06:06
திருத்தணி : திருமண முகூர்த்த நாளான நேற்று, முருகன் கோவிலில் மட்டும் முன்பதிவு செய்திருந்த, 7 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருத்தணி முருகன் கோவிலில், கடந்த ஏப்.20ம் தேதி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், தினசரி நடைபெறும் பூஜைகள் மட்டும், குறைந்த ஊழியர்கள் உதவியுடன் கோவில் குருக்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா முழு ஊரடங்கிற்கு முன், முருகன் மலைக்கோவிலில் திருமணம் நடத்துவதற்கு முன்பதிவு செய்தவர்கள் திருமணம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது.அந்த வகையில், முன்பதிவு செய்திருந்த, 7 ஜோடிகளுக்கு முருகன் மலைக்கோவிலில் நேற்று திருமணம் நடந்தது. இதில், குறைந்த அளவில் மக்கள் பங்கேற்றனர். நேற்று, திருத்தணி நகரத்தில் மட்டும், 25க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில், அரசு அனுமதித்த நபர்கள் எண்ணிக்கையுடன் திருமணங்கள் நடந்தன.