பதிவு செய்த நாள்
17
ஜூன்
2021
06:06
தஞ்சாவூர்: திருவையாறில் மேள,தாளம் முழங்க பாட்டு பாடி காவிரி நீரை பொதுமக்கள் வணங்கி வரவேற்றனர். தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு, 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை காவிரி நீர் வந்தடைந்தது. அப்போது, திருமஞ்சனவீதி படித்துறையில் பெண்கள்,சிறுமிகள் உள்ளிட்ட மக்கள், மேள,தாளம் முழங்க, பாட்டு பாடி காவிரி நீரை வரவேற்றனர். பின்னர், காவிரி நீரை, காவிரி தாயாக பாரம்பரிய முறைப்படி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து, விவசாயம் செழிக்க வேண்டியும், உணவு தட்டுபாடு இன்றி அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என வழிபட்டனர்.