ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் ஹிந்து முன்னணி சார்பில் மராட்டிய மன்னர் வீரசிவாஜியின் 377வது முடிசூட்டு விழா ஹிந்து சாம்ராஜ்ய தின விழாவாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ் முன்னிலை வகித்தார். சக்கம்பட்டி, ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு, காமராஜர் சிலை, பஸ்ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். சத்ரபதி வீர சிவாஜி உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். நகர தலைவர் கருப்பையா, செயலாளர்கள் பால்பாண்டி, பகவதி ராஜ்குமார், நிர்வாகிகள் பங்கேற்றனர்.