ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை யொட்டி பக்தர்கள் இன்றி கோயிலுக்குள் ராமர், ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
ராமாயண வரலாற்றில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்கும் நிகழ்வை குறிக்கும் வகையில் நேற்று கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ராமர் பல்லக்கில் எழுந்தருளியதும், அங்கிருந்த ராவணனை வேல் மூலம் வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் உதயகுமார் நடத்தினர். பின் ராமருக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் பழனிக்குமார், பேஷ்கார் கமலநாதன், ஊழியர்கள் செய்தனர்.இன்று (ஜூன் 19) கோயிலுக்குள் ராவணன் தம்பி வீபிஷணரை இலங்கை மன்னராக அறிவித்து அவருக்கு ராமர் பட்டாபிேஷகம் சூட்டும் நிகழ்வும், ஜூன் 20 ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்க உள்ளது.