ஆர்.கே.பேட்டை: கிராம கோவில்களில் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக பூஜைகள் நடத்தி வருகின்றனர். இதில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சிகளில், பக்தர்கள் சமூக விலகலை மறந்து கூட்டமாக பங்கேற்பது கவலை அளிப்பதாக உள்ளது.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் சில கிராம கோவில்களில் தற்போது நடை அடைக்கப்பட்டுள்ளது.குக்கிராமங்களில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.இதில் தங்களின் நேர்த்திக்கடனாக அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். இந்த பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளில், பக்தர்கள் கூட்டமாக பங்கேற்கின்றனர். நேற்று முன்தினம், ஆர்.கே.பேட்டை அடுத்த நாகபூண்டி ஏரிக்கரையில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில், பக்தர்கள் சமூகவிலகலை கடைபிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.