Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநீர்மலை கோவிலில் ரோப் கார் சேவை: ... தவசிலிங்க சுவாமி கோயிலில் சுக்ர வார சிறப்பு வழிபாடு தவசிலிங்க சுவாமி கோயிலில் சுக்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி கோவில் பொக்கிஷ அறையில் உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
காஞ்சி கோவில் பொக்கிஷ அறையில் உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
11:06

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், பல ஆண்டுகளுக்கு பின், 16 உற்சவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், உற்சவர் சிலை முறைகேடு விவகாரத்தில், பல பிரச்னைகள் எழுந்துள்ளன. இரட்டை திருமாளிகை, திருவாச்சி மாயம் போன்ற புகார்களால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்து, அடிக்கடி விசாரணை நடத்தி செல்கின்றனர்.

இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், புதிதாக, 16 உற்சவர் சிலைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், கோவில் ஊழியர்கள் நடத்திய ஆய்வில், விநாயகர், லக் ஷ்மி, நாயன்மார்கள் உட்பட, 16 சிலைகள் இருப்பது தெரிந்தது. கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில், நகைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அந்த அறையில், இத்தனை ஆண்டுகளாக உற்சவர் சிலைகள் ஏன் இருந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சிலைகள், கோவில் ஆவணங்களில் குறிப்பிடப்படாமலேயே உள்ளன. கண்டெடுக்கப்பட்ட சிலைகள், என்ன மாதிரி யான உலோகத்தால் செய்யப்பட்டவை என, ஆய்வு நடைபெற உள்ளது. கோவில் சிலைகள், ஆவணங்களில் இல்லாத காரணத்தால், அவை கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.எனவே, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை ஆவணப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறியதாவது: உற்சவர் சிலைகள் குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் தெரிவித்துள்ளோம். சிலைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். வெண்கலமா, தங்கமா என, ஆய்வுக்குழுவினர் ஆய்வு நடத்திய பிறகே தெரியவரும். ஊரடங்கு காரணமாக, ஆய்வு பணி சற்று தாமதமாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அட்சய திருதியையான இன்று பகவான் ஸ்ரீ ராம்லாலா சர்க்கார் தரிசனம் கண்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் ... மேலும்
 
temple news
தேனி: வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.தேனி ... மேலும்
 
temple news
கோவை; அட்சய திருதியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில்  துர்கா - லட்சுமி - சரஸ்வதிக்கு ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.25 கோடி கிடைத்தது.பழநி முருகன் கோயிலில் உண்டியல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar