மக்கள் சுபிட்சமாக வாழ 14 கி.மீ., அங்கப்பிரதட்சணம் செய்த பெண்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2021 05:06
திருவண்ணாமலை: ஆந்திராவை சேர்ந்த அருணாச்சலமாதவி என்ற பெண், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் குணமடைந்து சுபிட்சமாக வாழ திருவண்ணாமலை 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் அண்ணாமலையார் மலையை அங்கப்பிரதட்சணம் செய்தார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலம் மாதந்தோறும் பவுர்ணமி நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதில் சித்ரா பவுர்ணமி அன்றும் கார்த்திகை தீப பவுர்ணமி அன்றும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கிரிவலம் வருவார்கள். சென்ற ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவல பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆந்திர மாநிலம் பீமவரம் ஊரை சேர்ந்த அருணாசலமாதவி என்ற பெண், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உலக மக்கள் அதிவிரைவில் குணமாகவும் கொரோனா வைரஸ் தாக்குதல் படிப்படியாக குறைந்து மக்கள் சுபிட்சமாக வாழவும் அண்ணாமலையாரை வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்தார். இவர் கடந்த 15 வருடங்களாக அண்ணாமலையாரின் தீவிர பக்தையாக இருந்து வருகிறார். ஏற்கனவே 3 முறை இவர் உலக நன்மைக்காக அங்கப்பிரதட்சணம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.