* சிந்தித்து பொறுமையாக செயல்பட்டால் உலகமே உங்கள் கையில். * பிறரது குற்றம், குறைகளையே ஆராய்பவனுக்கு உறவினர் என யாரும் இருக்க மாட்டார்கள் * நன்மையோ, தீமையோ செயலின் விளைவு கட்டாயம் கிடைத்தே தீரும். * மனசாட்சியை புறக்கணிப்பதைவிட பெரிய வஞ்சகம் வேறில்லை. * உருவத்தால் சிறியவர் என்று யாரையும் ஏளனமாக பார்க்காதீர்கள். * அடங்காத கோபம் குடும்பத்தின் அமைதியை கெடுத்து விடும். * கட்டிய கணவனையே பழிதுாற்றும் பெண் எமனுக்கு நிகரவாள். * சிறிய செயலாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து செய்வதே நல்லது. * அமிர்தமாகவே இருந்தாலும் பசித்த பின் உண்பது அவசியம். * இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாது இருப்பதே உண்மையான உறவு. * சூதாடுவதும், தேவையில்லாத வாக்குவாதமும் தீராத துன்பம் தரும். * உழவுத்தொழிலின் மூலம் கிடைத்த செல்வம் என்றும் நிலைக்கும். * நாவடக்கத்துடன் அமைதி காப்பதே தவ வாழ்வின் அடையாளம். * பிறருக்கு அடிமையாய் இருந்து உண்பதை விட உழைத்து வாழ்வது சிறந்தது. * நீரின்றி அமையாது உலகு என்பதால் நீர்வளம் உள்ள ஊரில் வாழ்தலே சிறப்பு.