செஞ்சி : செஞ்சி அடுத்த அன்னமங்கலம் சிவசக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி, கடந்த 25ம் தேதி புதிய சுவாமி சிலைகள் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. 26ம் தேதி காலை 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, கணபதி ஹோமம் நடந்தது. மாலை 7:00 மணிக்கு காப்பு கட்டுதல், இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இரவு சுவாமி சிலைகள் அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்தனர். நேற்று காலை 7:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், 108 விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. 9:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு கோபுர கலச கும்பாபிஷேகமும், 10:15 மணிக்கு மூலவர் மகா அபிஷேகமும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழா குழுத் தலைவர் முன்னாள் எம்.பி., ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேக பூஜைகளை செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவில் சிவாச்சாரியார் ஈஸ்வர சிவம் தலைமையில் செய்தனர்.