பதிவு செய்த நாள்
29
ஜூன்
2021
07:06
திருப்போரூர்: முகூர்த்த நாள் மற்றும் கோவில் நடை திறக்கப்பட்டதால், நேற்று திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், விசேஷ நாட்களில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடை பெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக, இரு மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தளர்விற்கு பின், நேற்று கோவில்கள் திறக்கப்பட்டன. நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் பலர் வந்தனர். பக்தர்கள், சரவண பொய்கை குளத்தில் நீராடி, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அதே போல், கோவில் வெளிப்புற வளாகத்தில் திருமணங்களும், காதுகுத்தலும் நடந்தன. தவிர, திருப்போரூர் மற்றும் மற்ற ஊர்களில், திருமணம் முடித்தோரும், கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசித்தனர்.