பதிவு செய்த நாள்
01
ஜூலை
2021
02:07
நாகர்கோவில்: பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயில் ரூ.1.85 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலை பார்வையுட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது: நீலகண்டசுவாமி கோயில் புகழ்பெற்ற சிவாலயங்களில் 7 வது திருத்தலமாகும். இந்தக் கோயிலில்100 ஆண்டுகளுக்கு மேலாக குடமுழுக்கு நடைபெறவில்லை என்றும், கும்பாபிஷேகம் தொடா்ந்து நடத்தவும், நீலகண்டசுவாமி கோயிலை பழமை மாறாமல் புனரமைக்கவும் வேண்டுமென இப்பகுதி மக்கள், ஆன்மிகவாதிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்தனா். அதன்பேரில், ரூ.1 கோடி மதிப்பில் திருக்கோயில் 5 நிலை ராஜகோபுரம் பழமை மாறாமல் புதுப்பித்தல், ரூ.12.50 லட்சம் மதிப்பில் தெப்ப மண்டபம் மற்றும் வாகன புனரமைத்தல், ரூ.10 லட்சம் மதிப்பில் திருமதிற்சுவா் பழுது பார்த்தல், ரூ.10 லட்சம் மதிப்பில் வடக்குவாசல் மண்டபம் புனரமைத்தல், ரூ.5 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமரா அமைத்தல், ரூ.7.50 லட்சம் செலவில் தெப்பக்குளம் கிழக்கு மண்டபம் புனரமைத்தல், ரூ.40 லட்சம் செலவில் சுவாமி அம்மன் சன்னதி கொடிமரத் திருப்பணி என மொத்தம் ரூ.1.85 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தத் துறை அமைச்சரிடம், நேரில் எடுத்துக் கூறி, பணிகளை விரைவில் தொடங்குவதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவோம் என்றார்.