பதிவு செய்த நாள்
02
ஜூலை
2021
05:07
பெங்களூரு: பெங்களூரின், அறநிலையத்துறைக்குட்பட்ட, அனைத்து கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கவேண்டும்," என, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாசபூஜாரி உத்தரவிட்டார்.பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி தலைமையில், நேற்று கூட்டம் நடந்தது.அதில் அவர் பேசியதாவது:கோவில்களை ஆய்வு செய்து, எல்லையை அடையாளம் காண வேண்டும். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான கோவில்களின் நிலம், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றுவதில், ஏதாவது பிரச்னைகள் இருந்தால், மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு வந்து, சரி செய்து கொள்ள வேண்டும். கோவில்களின் சொத்துகளை பாதுகாப்பதில், குளறுபடி செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.