பதிவு செய்த நாள்
02
ஜூலை
2021
05:07
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பல்லவர் கால மூத்ததேவி மற்றும் சோழர் கால கல்வெட்டு, பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.விழுப்புரம், புறவழிச்சாலை அருகே உள்ள கொட்டப்பாக்கத்துவெளி கிராமத்தில், நடுநாட்டு வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் குழுவினர், கடந்த 15ம் தேதி களஆய்வு மேற்கொண் டனர்.
அப்போது, நான்கரை அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பல்லவர் கால மூத்ததேவி மற்றும் சோழர் கால கல்வெட்டு, மண்ணில் புதைந்த நிலையில், கண்டறியப்பட்டது.இதனை பாதுகாக்கும் வகையில், அங்கு மேடை அமைத்து, பலகைக் கல் பதிக்கப்பட்டு அவை பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு, எழுத்தாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். திருவாமாத்துார் சரவணகுமார் முன்னிலை வகித்தார். கரிகால சோழன் பசுமை மீட்புப் படை அகிலன் வரவேற்றார். அழகியநாதர் திருக்கூட்டம் அய்யாசாமி தலைமையிலான குழுவினரால் வழிபாடு நடந்தது. பின்னர், கொட்டப்பாக்கத்துவெளி கிராமப் பொதுமக்களிடம், பலகைக் கல் தாங்கிய மேடை ஒப்படைக்கப்பட்டது.