பெருக்கு என்றால் பெருகுதல் என்பது மட்டுமல்ல, சுத்தம் செய்தல் என்பதும் அதன் பொருள். ஆடி மாதத்தில் காவிரியாறு பெருக்கெடுத்து ஓடி வரும். சிலநேரங்களில் கரையையும் தாண்டும் நிலை கூட ஏற்படும். அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டு விடும். ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும். மனித மனங்களிலும் ஆசை, பொறாமை, தீய எண்ணம், ஆணவம் உள்ளிட்ட கெட்ட குணங்கள் நிரம்பியுள்ளன. இதை பக்தி என்னும் வெள்ளத்தை உள்ளே பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதையும் பெருக்கு என்னும் சொல் நமக்கு உணர்த்துகிறது. ஆடிப்பெருக்கன்று துவங்கும் தொழில்கள் பலமடங்கு செல்வத்தை தரும் என்பது ஐதீகம். அதுபோல், மனமாசைக் கழுவி, உள்ளத்தில் பக்தியை நிரப்பி வைத்து விட்டால் அன்பு பெருகி உலகமே திருந்தி விடும்.