ஸ்ரீரங்கம் : கொரானா தொற்று பரவல் காரணமாக பேரிடர் லேலாண்மை அறிவுரைப்படி வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்க்கு தடைவிதிகப்பட்டு இருந்தது தற்போது கொரானா தொற்று பரவல் குறைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்க்கு அனுமதி அளித்ததை முன்னிட்டு சுமார் 71 நாட்களுக்கு பிறகு இன்(5ம் தேதி) திங்கள்கிழமை காலை முதல் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டுக்காக கோயில் திறக்கப்பட்டது. கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவருக்கும் நுழைவுவாயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, வெப்பமானி மூலம் பரிசோதனையும் செய்ய செய்யப்பட்டது. முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் சேவை நேரம்: காலை 6.30 - 7.30 மணி, காலை 9.00 - 12.30 மணி, பிற்பகல் 2.30 - 5.30 மணி, மாலை 6.30 - 8.00 மணிவரை தரிசனம் செய்யலாம் .