ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2021 06:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். கொரோனா ஊரடங்கினால் ஏப்., 25ல் தமிழகத்தில் அனைத்து கோவிலும் மூடப்பட்டது. தற்போது அறிவித்த தளர்வால் இன்று ராமேஸ்வரம் கோயில் திறக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதியிலிருந்து ராமேஸ்வரம் வந்த பக்தர்கள், முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோவில் அக்னி தீர்த்த கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து, தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். பின் பக்தர்கள் முக கவசம் அணிந்தபடி கோவிலுக்குள் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.