பதிவு செய்த நாள்
08
ஜூலை
2021
05:07
பெங்களூரு: கொரோனா ஊரடங்கால், இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த, பிரசித்தி பெற்ற, இஸ்கான் கோவில், நேற்று முதல் திறக்கப்பட்டது. அரசின் விதிமுறைப்படி, பக்தர்கள் தரிசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டதால், கோவில்களை திறக்க, அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றும்படி உத்தரவிட்டுள்ளது.இதன்படி பெங்களூரு ராஜாஜி நகரின், இஸ்கான் கோவிலும் நேற்றிலிருந்து திறக்கப்பட்டது. தினமும் காலை 8:30 மணி முதல், மதியம் 12:30 மணி வரை, மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணிவரை, சாதாரண பூஜைகள் நடக்கும்.கொரோனா பரவுவதால், சிறப்பு பூஜை, ஹோமம், அங்கப்பிரசன்னத்துக்கு வாய்ப்பளிக்கவில்லை. இஸ்கான் கோவில் உட்புறத்திலுள்ள துவாரகாபுரா , மதுரா ஹால் திருமண மண்டபங்கள் வழக்கம் போல செயல்படும். இங்கு திருமணங்களுக்கு மட்டும் அனுமதியுண்டு. திருமணங்களில், 100 பேர் மட்டும் சேரும்படி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.