பதிவு செய்த நாள்
08
ஜூலை
2021
05:07
திருவொற்றியூர்: பழமை வாய்ந்த, காலடிப்பேட்டை, எல்லையம்மன் கோவிலுக்கு, ஏராளமான நன்கொடைகள் குவியும் நிலையில், அதை நிர்வகிக்கும் தனியார் நிர்வாகம், கோவிலை முறையாக பராமரிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. புராதனமிக்கதுசென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சாத்தாங்காடு, மேட்டு தெருவில்,75 ஆண்டுகள் பழமை வாய்ந்த, எல்லையம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஏக்கர் பரப்பில் உள்ள இக்கோவிலில், விநாயகர், ஆஞ்சநேயர், முருகன் உட்பட பல தெய்வங்களின் சன்னிதிகள் உள்ளன. இங்கு, பிரதோஷம், ஆடி மாத கூழ்வார்த்தல், முருகன் திருக்கல்யாணம் போன்றவை, விஷேசமாக நடைபெறும்.தனியார் பராமரிப்பில் இருக்கும் இக்கோவிலுக்கு, பக்தர்கள் அதிக அளவில் நன்கொடை செலுத்துகின்றனர். எனினும், அதற்கான முறையான கணக்கு வழக்குகள் பராமரிப்பதில்லை என, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கைபிரதான சன்னிதியான, எல்லையம்மன் சன்னதியில் உண்டியல் கிடையாது.மாறாக, குடத்தில் மஞ்சள் துணியை கட்டி, அதில் பக்தர்களின் காணிக்கை பெறுவதாகவும், அது குறித்த கணக்குகள் ஏதும் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை என்றும் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி குரல் எழுந்துள்ளது. வடிவுடையம்மன், கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அடுத்தபடியாக, அதிக வருவாய் பெறும் இக்கோவிலில், வளர்ச்சிப் பணிகள் ஏதும் செய்யாமல், தனிநபர் லாப நோக்கில், கோவிலை நிர்வகித்து வருவதாகவும், பக்தர்கள் சரமாரி குற்றம் சாட்டுகின்றனர்.பக்தர்களின் அதிருப்தி குரலுக்கு செவிசாய்த்து, கோவிலில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள, நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். வளர்ச்சி இல்லைஎல்லையம்மன் கோவிலில், விழாக்காலங்களில், அதிகளவில் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. தவிர, காரியத்திற்கு கட்டணமாக, 700 ரூபாய் பெறப்படுகிறது. உண்டியல் பணம் முறையாக எண்ணப்படுவதில்லை. மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாக இருந்தும், இன்னும் வளர்ச்சியடையாமல் உள்ளது.இதை நிர்வகிக்கும் நிர்வாகிகள், வரவு - செலவு கணக்குகளை முறையாக பராமரித்து, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.எஸ். மணவாளன், 69, பக்தர், காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.