மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன்கோவில் சாலையில், கோவிந்தபிள்ளை மயானம்அருகே, நகராட்சிக்கு சொந்தமான, அனைத்து இந்து சமுதாய நந்தவனம் உள்ளது.
இதனருகே, பவானி ஆறு ஓடுவதாலும், மலைமீது ஈஸ்வரன் கோவில் உள்ளதாலும், காசியை போன்ற அமைப்பு உள்ளது. அதனால், இங்கு முன்னோர்களுக்கு திதி, ஈமச் சடங்குகள் ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவில் செய்து வருகின்றனர்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது. இதையடுத்து மே மாதம், 24ம் தேதி நந்தவனம் அடைக்கப்பட்டது. அதன் பின்பு இங்கு, எந்த சடங்குகளும் நடைபெறவில்லை. இதற்கிடையில் ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளங்களை அறிவித்துள்ளது. இதனடிப்படையில், 41 நாட்களாக மூடப்பட்டிருந்த, அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம், மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது இங்கு அனைத்து ஈமக் காரியங்களும், புரோகிதர் வாயிலாக செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, சங்கத் தலைவர் பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.