* உண்மையை பேசுங்கள். அது உங்கள் மேல் உள்ள மரியாதையை கூட்டும். * ஏழைகளின் மனம் வலிக்கும் படி எதுவும் செய்யாதே. * கடவுளை சரணடைந்தால் பொய், பொறாமை நீங்கும். * குருவை வணங்க தயங்காதே. * எந்த உயிரையும் துன்புறுத்தாதே. * எப்போதும் அன்புடனும், இரக்கத்துடன் வாழு. * கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் வேண்டாமே. * விரதம் இருப்பதை விட யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே நல்லது. * பிறருக்கு கொடுப்பதற்காகவே கடவுள் செல்வத்தை கொடுத்தார். * உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களுடன் பழகாதே. * எல்லா உயிர்களையும் தன்னை போல் நினைப்பவர்களின் மனதில் கடவுள் இருக்கிறார். * எல்லா செயலிலும் பொது நலன் இருக்க வேண்டும். வழிபாட்டிலும் கூட சுயநலம் கூடாது * உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட பசித்தவருக்கு உணவு கொடு. * பிறர் பசியை போக்குவதோடு அவரின் துன்பத்திலும் பங்கெடு.