வழிகாட்டுகிறார் சிவானந்தர் * பத்தில் ஒரு பங்கு வருமானத்தை தர்மவழியில் செலவிடு. * நம்மை விட்டு விலகாத தோழனாக கடவுள் இருக்கிறார். * வழிப்போக்கனைப் போல வாழ்ந்தால் ஆசைகள் குறையும். * ஆசைகளை குறைத்தால் கடவுளை அடையலாம். * பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். எதிரியையும் நேசி. * பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தை தினமும் படி. * தினமும் இரண்டு மணி நேரம் மவுனமாக இரு. * எப்போதும் உண்மை பேசு. * பிறரை புண்படுத்தாமல் அன்பு காட்டு. * தேவையை குறை. திருப்தியாக இரு. * தினமும் 45 நிமிடம் உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடு. * தவறால் கிடைத்த அனுபவத்தால் உன்னை திருத்திக்கொள். * துாங்கும் முன்பும், எழுந்த பின்பும் கடவுளை நினை. * எண்ணம், சொல், செயலில் எவருக்கும் துன்பம் செய்யாதே. * அநியாய வழியில் கிடைத்த பணம், பொருளை ஏற்காதே. * தினமும் அதிகாலையில் தியானம் செய். * பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி, சகிப்புத்தன்மையால் கோபத்தைக் கட்டுப்படுத்து. * நேர்மையை உயிராக போற்று.