‘சந்தேகக் கோடு.. அது சந்தோஷக் கேடு’ என்பார்கள். அது நிஜம் என்பதை அன்றாடம் பார்க்கிறோம். எந்த விஷயத்தையும் சந்தேகத்தோடு பார்த்து பின்னர் அது நோயாகவே மாறுகிறது. பல சினிமாக்களில் கணவன், மனைவி சந்தேகப்பட்டு கொண்டே இருப்பார்கள். அது பார்ப்பதற்கு திரில்லர் படம்போல் இருந்தாலும், நம் வாழ்க்கையில் நடந்தால் எத்தனை கொடுமையானது என்பது புரியும். சந்தோஷத்தை கெடுக்கும் சந்தேகத்தை தவிருங்கள்.