* நடராஜர் என்பதை நட+ராஜர் என பிரிப்பர். இதற்கு ‘நடனத்தின் அரசன்’ என்பது பொருள். இதையே நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் என்றும் குறிப்பிடுவர். * கூத்து என்னும் ஆடல் கலையில் வல்லவன் என்பதால் கூத்தன் என சிவனுக்கு பெயருண்டு. இந்த நடனத்தை தரிசிப்பவருக்கு ஞானம் உண்டாகும் என்பதால் சிவனுக்கு ஞானக் கூத்தன் என்றும் பெயருண்டு. * சபேசன் என்றும் நடராஜரை அழைப்பர். சபைகளில் ஆடும் சிவன் என்பது பொருள். பொற்சபை (கனக சபை), வெள்ளி சபை (ரஜித சபை), தாமிர சபை, ரத்ன சபை, சித்திர சபை என்று பஞ்ச சபைகளில் சிவபெருமான் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன.