பனைக்குளத்தில் கோகுல கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2021 04:07
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே பனைக்குளம் கிராமத்தில் பாமா, ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஜூலை 10., அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 10:30 மணி அளவில் கடம் புறப்பட்டு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பகலில் அன்னதானம் நடந்தது. வேத பாராயணமும், திவ்யபிரபந்த பாடல்களும் பாடப்பட்டது.