அயோத்தி ராமர் கோவிலில் 2023 இறுதியில் ராமர் விக்ரகம் பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2021 11:07
உத்தரகன்னடா: அயோத்தி ராமர் கோவிலில், 2023 இறுதியில் ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ராமர் கோவில் கட்டுமான கமிட்டி பொறுப்பாளர் கோபாலஜி, உத்தர கன்னடாவின் சிர்சியில் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள், மும்முரமாக நடக்கிறது. விசாலமாக, அழகாக கட்டப்படுகிறது. தற்போது காம்பவுண்ட் சுவர் கட்டும் பணிகள் நடக்கிறது. 2023 இறுதியில், கோவிலில் ஸ்ரீராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்ய, இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.