தாவணகரே: தாவணகரே சென்னகிரி அருகில், பீருரு - சம்மசகி நெ டுஞ்சாலையில் உள்ள மஹாபலேஸ்வரர் கோவில், 800 ஆண்டு பழமையானது. ஹொய்சாலர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. வரலாறு பிரசித்தி பெற்ற இக்கோவில், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. விஷமிகள் புதையல் ஆசையில், கடவுளின் விக்ரகத்தை தோண்டினர். அழகான சிற்பக்கலை கொண்ட கோவிலின் கற்கள், விழத்துவங்கியுள்ளது. கோவிலால் எந்த வருவாயும் இல்லையென்றாலும், கல்கரே கிராமத்தின் தோட்டய்யா என்பவர், வாரம் இரண்டு முறை இக்கோவிலுக்கு வந்து பூஜை செய்கிறார் . புராதன கோவிலை புதுப்பித்தால், சிறந்த சுற்றுலா தலமாகமாறும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். இதில் கவனம் செலுத்தும்படி, பலரும் கோரியுள்ளனர்.