பதிவு செய்த நாள்
14
ஜூலை
2021
10:07
தேனி: தேனி மாவட்டம் குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரத்து செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இக்கோயில் ஆடித்திருவிழா இந்தாண்டு ஜூலை 17 ல் துவங்கி ஆக., 16 வரை நடக்க இருந்தது. ஜூலை 17 ல் முதல் சனிவாரத்திருவிழாவும், ஜூலை 24ல் 2வது சனிவாரத்திருவிழாவும், ஜூலை 30ல் திருக்கல்யாணமும், 31ல் 3வது சனிவாரத்திருவிழாவும், ஆக., 7 ல் 4வது சனிவாரத் திருவிழாவும், ஆக.,9ல் சோணை கருப்பணசாமி பொங்கல், சிறப்பு பூஜையும், அதனைத் தொடர்ந்து ஆக.,14 ல் 5வது சனிவாரத்திருவிழா நடக்க இருந்தது. இந்நிலையில் ஆடித்திருவிழா முழுவதும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அறநிலையத்துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. எனினும் தினசரி காலை 6:00 மணிக்கு காலசந்தி, மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை சாயரட்சை பூஜைகள் நடக்கும். அதில் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.