குமாரபாளையம்: லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் உலக நன்மைக்காக, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. குமாரபாளையம் அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் ஆஞ்சநேய சிவநாராயண அறக்கட்டளை சார்பில், உலக நன்மைக்காக, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். தொடர்ந்து, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.