தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பாப்பனேந்தலில், பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், விக்னேஸ்வரர் வழிபாடு நடைபெற்று, முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்பு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.