வாழவந்த காளியம்மாள் கோயிலில் வரும் 22ம் தேதி கொடை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2012 11:06
திருநெல்வேலி: நெல்லை வடக்கு பைபாஸ் ரோடு வாழவந்த காளியம்மாள் கோயிலில் வரும் 22ம் தேதி கொடை விழா நடக்கிறது.நெல்லை வடக்கு பைபாஸ் ரோடு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள வாழவந்த காளியம்மாளுக்கு வரும் 22ம் தேதி கொடை விழா நடக்கிறது. இதைமுன்னிட்டு வரும் 21ம் தேதி மாலை 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.தொடர்ந்து மறுநாள்(22ம் தேதி) காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்படுகிறது. காலை 10 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு சத்திய அருள்வாக்கு மற்றும் அன்னபூஜையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மகாதேவி அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனையும், 8 மணிக்கு காளி அலங்காரம் வீதிஉலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமபூஜை நடக்கிறது.இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளின் அருள்பெறுமாறு விழா கமிட்டியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.