Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூன்றே நிமிடத்தில் 108 அஷ்டோத்திரம்! ஆடி மாதமும் முக்கிய விஷேசங்களும்! ஆடி மாதமும் முக்கிய விஷேசங்களும்!
முதல் பக்கம் » துளிகள்
சனியனே என்று திட்டக் கூடாது என் தெரியுமா?
எழுத்தின் அளவு:
சனியனே என்று திட்டக் கூடாது என் தெரியுமா?

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2021
06:07

பல வீடுகளில் தாய்மார்கள் பிள்ளைகளை சனியனே என திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பொதுவாக பிள்ளைகள் பெற்றோருக்கு பிடிக்காத செயல்களை செய்யும்பொழுதும், அதிகம் பிடிவாதம் பிடிக்கும் பொழுதும், சொல் பேச்சு கேட்காத பொழுதும் பெற்றோர் இப்படி சனியனே என திட்டுவார்கள். ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகளை இப்படி சனியனே என திட்டினால் ஒருவருக்கு மிகப்பெரிய கோபம் வந்து அவர் உங்களை வாட்டி வதைத்து விடுவார் தெரியுமா? யார் அவர். உங்கள் பிள்ளைகளை சனியனே என திட்டினால் உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். உங்கள் குழந்தைகளை நீங்கள் சனியனே என திட்டும் பொழுது நீங்கள் சனி பகவானை கேலி செய்ததாக நினைத்து சனி பகவான் உங்கள் மீது அவருடைய முழு பார்வையையும் செலுத்தி விடுவார் என்பது ஐதீகம்.

சனி பகவானை மந்தமான கடவுள் என சொல்வார்கள். அவருக்கு மாந்தன் என்ற ஒரு பெயருமுண்டு. சனி கிரகம் மற்ற எல்லா கிரகங்களை விடவும் சூரியனை மெதுவாக சுற்றி வருகிறது. ஒருவருடைய எண்ணத்தில் சனியன் என்று வந்துவிட்டால் அவருடைய வார்த்தையிலும் சனியனே என்ற சொல் மிகவும் ஆபத்தானது. ஒருவரின் நாவிலிருந்து அந்த வார்த்தை வந்துவிட்டால் சனி அவர்களின் செயல்களில் சேர்ந்து விடுவார். அதனால் நீங்கள் வாழ்க்கையில் அதிக சோதனைகளை சந்திக்க நேரிடும். அதனால் இனிமேல் நீங்கள் யாரையும் சனியனே என திட்டி விடாதீர்கள். சனி பகவான் உங்களை பிடித்த பிறகு வருத்தப்படுவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்றது. சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் நல்லது, கெட்டதுக்கு தகுந்தாற்படி பலன் கொடுப்பார். ஆனால் அவரால் கிடைக் கும் நன்மையால் மகிழாமல், தீமையை மட்டுமே எண்ணி மக்கள் பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயரே  மிஞ்சியது.

மனம் வருந்திய சனி, அக்னி வனம் எனப்படும் திருக்கொள்ளிக்காடு வந்து, சிவனை நினை த்து தவமிருந்தார். சிவன் தரிசனம்  தந்து, சனீஸ்வரரை பொங்கு சனியாக மாற்றினார். இவர் அக்னீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார். சனி பகவான் மந்த கதியுள்ளவர் என்பது இய ற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்க ளை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொ ல்வதுண்டு. வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால்,  ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு. மந்த கதி உள்ளவர்களுக்காக சனி பகவானு க்கு அர்ச்சனை செய்யலாம். ஆனால் சனிய னே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்த தாகக் கருதி, சனி பகவான்  அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் எனபது ஐதீகம். மந்த கதி உடையவர்களிடம் பக்குவமா க பேசி  திருத்துபவர்களுக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar