Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று திருவோண விரதம்: பெருமாளை ...
முதல் பக்கம் » துளிகள்
நினைத்தை நடத்தும் லட்சுமி நரசிம்மர் கோவில்
எழுத்தின் அளவு:
நினைத்தை நடத்தும் லட்சுமி நரசிம்மர் கோவில்

பதிவு செய்த நாள்

23 டிச
2025
12:12

ஹூப்பள்ளி மாவட்டம், வெங்கடேஷ்வர் நகர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இந்த கோவில் அமைந்துள்ள பகுதியை சுற்றி, மரங்கள் சூழ்ந்து பசுமையாக காணப்படுகிறது. கோவிலின் கட்டட அமைப்பு, பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. கோவில் நன்கு பராமரிக்கப்படுவது மற்றொரு சிறப்பு. வாகனங்களை நிறுத்த இலவச பார்க்கிங் வசதியும் உள்ளது. இந்த கோவிலுக்கு வருவோர், 24 நிமிடங்கள் அமர்ந்து மனதார நரசிம்மரை வேண்டினால், நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இங்கு அமைதியான சூழல் நிலவுவதால் தியானம் செய்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது. இங்கு நரசிம்ம ஜெயந்தி பிரமாண்டமாக நடக்கும். அந்த சமயத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும்.


நரசிம்மர் சிலையின் அருகில் லட்சுமி தேவி சிலை உள்ளது. இந்த கோவில் வட கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. கோவில் பல நுாற்றாண்டுகளை தாண்டி நிலைத்து நிற்கிறது. இதற்கு அங்குள்ள கல் வெட்டுகளே சான்று. அதே சமயம், காலத்திற்கேற்ப கோவில் புது பொலிவடைந்து கொண்டே வருகிறது என்பது மற்றொரு சிறப்பு. இந்த கோவிலில், மாணவர்கள் பரீட்சைக்கு போவதற்கு முன் வந்து வேண்டி கொள்வர். தங்கள் பேனாக்களை வைத்து வழிபட்டு செல்வர். இங்கு வந்து வேண்டி கொண்டு தேர்வு எழுதினால், தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என நம்புகின்றனர். காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கப்படுகிறது. – நமது நிருபர் –


 
மேலும் துளிகள் »
temple news
மார்கழி திருவோணம் பெருமாளை வழிபட மிக சிறந்த தினமாகும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட ... மேலும்
 
temple news
விவசாயி வில்சன் நாணயம் தவறாத மனிதர். வயலில் ஒரு முறை அவர் உழுத போது துளையிட்ட நாணயம் கிடைத்தது. அதை ... மேலும்
 
temple news
சொத்தை இரண்டு மகனுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்தார் தந்தை. நீங்களே எனக்கு பெரிய சொத்து என ... மேலும்
 
temple news
நெப்போலியன் என்ற பெயரைக் கேட்டாலே வெற்றி தான்  நினைவுக்கு வரும். அவரை பற்றி தெரிந்து கொள்வோமா...* ... மேலும்
 
temple news
அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஜானும், அவரது மகள் ஜடா ஸ்கடரும் சென்னையில் வசித்தனர். ஒருநாள் இரவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar