தண்ணீர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவுவது அவசியம். ஒருமுறை இறைவன் முன் இறந்த ஒருவரை அழைத்து சென்றனர். ‘‘நான் ஒருமுறை உன்னிடம் தண்ணீர் கேட்டும் தரவில்லையே’’ எனக்கேட்க, அதற்கு அவர் ‘‘உலகின் அதிபதி நீயே! அனைத்தும் உனக்கே சொந்தம். நான் எப்படி தண்ணீர் தராமல் இருக்க முடியும்’’ என்றார். ‘‘தன்னுடைய அடியவரின் பெயர் ஒன்றைச் சொல்லி, அவர் தண்ணீர் கேட்டும் தரவில்லையே’’ என்றான் இறைவன். அப்போதுதான் அவருக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. “அவனுக்கு தண்ணீர் கொடுத்திருந்தால் இப்போது என்னிடம் நன்மை கிடைத்திருக்கும்’’ என்றான் இறைவன். இனி தண்ணீர் கேட்பவருக்கு மறுக்காமல் கொடுங்கள்.