சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கு வந்த முல்லா ‘‘உழைக்காமல் வாழ ஆசைப்படுபவர்கள் கைதுாக்குங்கள்’’ என்றார். அங்கிருந்த அனைவரும் கைதுாக்கினர். முல்லா பதில் ஏதும் கூறாமல் நகர மக்கள் கூச்சலிட்டனர். ‘‘நம்ம ஊரில் எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என அறிய விரும்பினேன். இப்போது புரிந்து விட்டது அனைவரும் சோம்பேறிகள் என்று. உழைக்க மனம் இல்லாதவர்களிடம் எனக்கு என்ன பேச்சு’’ என சொல்லி வேகமாக நடந்தார் முல்லா. உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே.