மூன்று மனிதர்கள் ஆண்டவரை காண விண்ணுலகம் சென்றனர். அங்கு அவருக்கு அருகே ஒரே ஒரு நாற்காலிதான் இருந்தது. மூவரில் யார் அந்த நாற்காலியில் அமர்வது என கேள்வி எழுந்தது. ‘‘தங்களைப்பற்றி போதித்து மக்களை நல்வழிப்படுத்தியுள்ளேன். எனவே நான் தான் அமரத்தகுந்தவன்’’ எனறார் முதல்நபர். ‘‘நெருக்கடியின்றி மக்கள் வழிபட உமக்காக பல ஆலயங்கள் கட்டியுள்ளேன். எனக்குத்தான் அமரத்தகுதி உண்டு’’ எனறார் இரண்டவாது நபர். அமைதியாக நின்று கொண்டிருந்தார் மூன்றாவது நபர். ‘‘இந்த நாற்காலி உனக்கு வேண்டாமா..’’ என்று கேட்டார். ‘‘உம்மைப்பற்றி கவலைப்படாமல் ஏழைகளுக்கு உதவிகளை செய்துவந்தவன் நான். அதனால் இவர்களுடன் போட்டிபோட விரும்பவில்லை’’ என்றார். ‘‘ஏழைகளின் வடிவில்தான் நான் குடியிருக்கிறேன். எனவே நீதான் அமரத்தகுதியானவன்’’ என்றார் ஆண்டவர். இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்யுங்கள். இரு கை உங்களை வணங்கும்.