தீமைகளுக்கு காரணமாக இருப்பது பணம். ‘பணத்தாசை சகல தீமைகளுக்கும் ஆணிவேர்’. சிலர் தவறு செய்து அதை பணத்தால் ஈடுகட்டிவிடலாம் என எண்ணுகின்றனர். பணத்தால் எதை விலைக்கு வாங்கினாலும் ஒன்றை மட்டும் வாங்கவே முடியாது. அதுதான் ஆண்டவரின் கருணை. * பணக்காரர்களே! உங்களுக்கு வரப்போகும் துயரங்களுக்காக இப்பொழுதே அழுது ஊளையிடுங்கள். * பணத்தாசை பிடித்தவர்கள் ஆசையால் சூழ்ச்சி வலைகளில் சிக்கி நரகத்திற்கு செல்கின்றனர். * பணத்தாசை உள்ளவன் ஆண்டவரின் ராஜ்யத்தில் நுழைய முடியாது.