ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கீழத்தெரு முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவில் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை, பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மன் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். பின்பு கோவில் முன்பு, பெண்கள் கும்மி ஆட்டம் ஆடியும், இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் நேத்தி கடன் நிறைவேற்றினர். ராமேஸ்வரம் கோவிலில் திருவாச்சி மிஸ்ஸிங் : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு. தொடர்ந்து நேற்று காலை கோவிலில், இருந்து முளைப்பாரிகளை பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று, அரசூரணி குளத்து நீரில் கொட்டி கரைத்தனர். வள்ளலார் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடைபெற்றது.