வில்லியனுார்-வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.மாலை 3:30 மணியளவில் திருக்காமீஸ்வரர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.