காளி கோவில்களில் பொதுவாக ஆடு, கோழி முதலானவை பலியிடும் வழக்கம் இருக்கிறது. ஆனால் துாத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலுள்ள தம்பிராட்டி காளியம்மன் கோயிலில் சைவ உணவே படைக்கப்படுகிறது. இந்த காளி பயங்கர முகத்துடன் சாந்தநிலையில் காட்சி தருவது வித்தியாசமானதாகும். விரித்த சடை, மூன்று கண்கள், எட்டு கைகள் கொண்டிருந்தாலும் முகம் மட்டும் சிரித்த நிலையில் இருக்கிறது.