பதிவு செய்த நாள்
23
ஜூலை
2021
11:07
அருப்புக்கோட்டை: அய்யனார் ஒர் நாட்டுபுற காவல் தெய்வம். ஊர்கள், வயல் நிலங்கள், மலை உச்சி பகுதிகளில் அய்யனாருக்கு கோயில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். காக்கும் கடவுளான அய்யனார் வேண்டியதை நிறைவேற்றி தரும் ஆற்றல் உடையவர். அந்தவகையில் அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டி செவல் கண்மாய் அருகில் அய்யனார், கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு அய்யனார் மூலவராக உள்ளார்.
500 ஆண்டுகளுக்கு முன்புசுயம்புவாக அய்யனார் தோன்றியதாக வரலாறு கூறுகிது.இப்பகுதி அக்காலத்தில் விவசாய நிலமாக இருந்தது. இங்கு உழவு செய்ய ஏர் பூட்டி உழும் வேளையில் அய்யனார் சிலை தட்டுப்பட்டுள்ளது. என்னை இந்த இடத்தில் வைத்து வணங்குங்கள் என்ற அசரிரீ குரல் கூறியதால் இங்கு அய்யனார் மூலவராகவும், கருப்பசாமி, முனியசாமி , அய்யனார் அருகில் பூர்ணகலா, புஸ்பகலா உள்ளனர். கருப்பசாமி சிலை பின்புறம் வன்னிமரம் இருப்பது சிறப்பு. அய்யனார் சாமி நீர்நிலையை பார்த்து இருப்பதால் இங்குள்ள செவல் கண்மாயில் இதுவரை நீர் வற்றவில்லை என்கின்றனர் பக்தர்கள். வெள்ளிக் கிழமை ,அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ அலங்காரம் , அபிேஷகம் நடக்கும். குடும்ப கஷ்டங்கள், தீர்க்க முடியாத பிரச்னைகள், நினைத்ததை நடத்தி காட்டுவது, வேண்டியதை தருவது அய்யனாரின் மகிமை என்பதால்,இவரை காண சென்னை உட்பட பெருநகரங்களிலிருந்து வரும் பக்தர்கள் சுவாமியை வணங்கி செல்கின்றனர்.