மானாமதுரை : மானாமதுரை ஆனந்த வல்லி சமேத சோமநாதர் கோயிலில் ஆடிதபசு விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இங்கு ஆடியில் 10 நாட்கள் ஆடித்தபசு விழா நடக்கும். விழாவில் தினமும் சுவாமி, அம்பாளுடன் திருவீதி உலா நடக்கும். கொரோனா ஊரடங்கால் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடு உள்ளதால் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி சமேத சோமநாதருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். பக்தர்கள் உரிய சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.