வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில் திருக்கல்யாண வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2021 12:07
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்றிரவு (ஜூலை 22) சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருமண வைபவத்திற்கு பின் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சுவாமி, அம்பாள் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.