வேடசந்துார் : வேடசந்துார் அழகாபுரி ரோட்டில் உள்ளது கூவக்காபட்டி ஊராட்சி சுப்பிரமணிபுரத்தில் லிங்க வடிவிலான சிவன் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
வேடசந்துார் சுற்று வட்டார பகுதி சிவபக்தர்கள் இணைந்து, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலை போன்று இங்கு கட்டி வருகின்றனர். ஓரளவு கட்டட பணிகள் முடிந்த நிலையில், லிங்க வடிவிலான கோபுர பணிகள் பாக்கி உள்ளது. டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதுபோன்ற கோயில், தமிழகத்தில் வேறெங்கும் இல்லை என்கின்றனர் சிவ பக்தர்கள். சிவபக்தர் பொம்முசாமி கூறுகையில், கோயில் 27 அடி உயரம், 64 அடி சுற்றளவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடக்கிறது. இன்னும் பணிகள் முடியவில்லை. கட்டி முடிந்ததும் கோயிலுக்குள் லிங்கம் அமைக்கும் பணி நடைபெறும். பக்தர்களின் ஆதரவுடன் சில மாதங்களில் கும்பாபிேஷகம் நடைபெறும், என்றார்.