பதிவு செய்த நாள்
23
ஜூலை
2021
03:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில் உள்ள, அம்மன் கோவில்களில், ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நகரில் அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊட்டி சாலையில் உள்ள பேட்டை மகா மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளி மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடந்தன. கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோன்று காந்தி மைதானத்தில் உள்ள, மைதானம் மாரியம்மன் கோவிலிலும், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. சிறுமுகை சாலை பழைய சந்தைகடை பகுதியில் உள்ள, மைக்கன் மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவிலில் உள்ள, தேவி கருமாரியம்மன் சன்னதியில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேக பூஜையும் செய்யப்பட்டது. நகரில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த, ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகளில், ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.