பழநி: பழநி, மலைக் கோயிலில் நேற்று ஆடி வெள்ளி, பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பழநி, சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அதிக அளவில் பக்தர்கள் வழிபாடு செய்ய வந்திருந்தனர். பெரியநாயகி அம்மன் மாரியம்மன் உட்பட அனைத்து அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. பெரியாவுடையார்கோயில் சப்த கன்னிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.