புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2021 11:07
புட்டபர்த்தி : புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் இன்று, குரு பூர்ணிமா விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், குரு பூர்ணிமா விழா, ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப் படும். அதன்படி இன்று காலை 8:00 மணிக்கு வேதம்; 8:25 மணிக்கு குரு வந்தனம்; 9:00 மணிக்கு ஸ்ரீசத்யசாய் டிரஸ்ட் பற்றிய முன்னுரையை நாகானந்த் வழங்கினர். தொடர்ந்து, இந்திய ஸ்ரீசத்யசாய் சேவை தொண்டு நிறுவன தலைவர் ஸ்ரீ கே.சக்கரவர்த்தி துவக்க உரையாற்றுகிறார். தொடர்ந்து, இந்திய ஸ்ரீசத்யசாய் சேவை தொண்டு நிறுவன துணை தலைவர் நிமிஷ் பாண்ட்யா உரையாற்றுகிறார். 9:30 மணிக்கு வீடியோ விளக்கக் காட்சி; 10:00 மணிக்கு பஜனை மற்றும் ஆரத்தி வழிபாடு நடைபெற உள்ளது. மாலை 5:00 மணிக்கு வேத பாராயணம் சிறப்பு இசை நிகழ்ச்சியும்; 6.30 மணிக்கு பஜனை மற்றும் ஆரத்தி வழிபாட்டுடன் விழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு, நிகழ்ச்சிகள் நடக்கும் பிரசாந்தி நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. நிகழ்ச்சிகள் https://www.youtube.com/watch?v=4pK59LSfkcM என்ற யுடியூப் முகவரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.