உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை சங்கரலிங்க சுவாமிகள் ஆசிரமத்தில் உலக அமைதி வேண்டி 2018 திருவிளக்கு பூஜை நடக்கிறது. உளுந்தூர்பேட்டை சங்கரலிங்க சுவாமிகள் ஆசிரமத்தில் 2018 திருவிளக்கு பூஜை மற்றும் குரு பூஜை பெருவிழா அடுத்த மாதம் 1ம் தேதி நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 7 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை, 8.30 மணிக்கு கலச பூஜை, 9 மணிக்கு மகா அபிஷேகம், 11 மணிக்கு மகா பூர்ணாஹூதி, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி வீதியுலா நடக்கிறது. மாலை 6 மணிக்கு 2018 திருவிளக்கு பூஜை, 6.30 மணிக்கு சுமங்கலிக்கு மங்கல பொருட்கள் வழங் குதல், இரவு 7 மணிக்கு பரத நாட்டியம், நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. விழாவிற்கு ராமகிருஷ்ணா ஆசிரம தலைமை சுவாமிஜி அனந்தானந்தஜி மகாராஜ் தலைமை தாங்குகிறார். திருவிளக்கு பூஜைகளை பாதூர் அகத்தீஸ்வரர் கோயில் பரம்பரை தர்மகர்த்தா அருணாச்சல குருக்கள் நடத்தி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சங்கரலிங்க சுவாமிகள் ஆசிரம தலைவர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.